ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷாருக்கு உதவி செய்த அமைப்பு என்றும், சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து உதவித்தொகைகளை பெற்று வந்தவர் என்றும், ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. பாஜக இந்த உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரை தற்பொழுது நீண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்றைய கர்நாடக மாநிலம் தும்கூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், தங்களது கட்சி பாசிச கட்சி கிடையாது. பல்வேறு விதமான கருத்துக்களையும் கட்சியின் தலைமை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளும். சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே இருவரும் தங்களது நிலை புரிந்து தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் வெற்றி பெற்று வந்தாலும் அவர்கள் காந்தி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் என சொல்வது இருவரையும் அவமானப்படுத்தும் விஷயம் என்று கூறினார்.
தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி வெறுப்புணர்வை தூண்டி நாட்டை பிரித்து வருவதாகவும் அதனை சரி செய்வதற்காகவே இந்த ஒற்றுமை யாத்திரையை தான் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரிட்டிஷாருக்கு உதவி செய்த அமைப்பு, சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து உதவித்தொகைகளை பெற்று வந்தவர். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது, பாஜக இந்த உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது. காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் தான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM