ஜவான் செட்டில் ரஜினி… விஜய்யுடன் ஷாருக் சந்திப்பு… நடந்தது என்ன? நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட தகவல்

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். அதில் தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. பிகில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்தச் சூழலில் அவர் பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான வைத்து அவர் படம் இயக்க கமிட்டானார். மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு வேகமாக நடந்தது. இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றி இருப்பது போல் ஷாருக்கான் தோற்றமளித்தார், இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து படம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

தொடர்ந்து, சென்னை மகாபலிபுரத்தில் செட்கள் அமைத்து ஜவான் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. இதில் நடிப்பதற்காக ஷாருக்கான் சென்னையும் வந்திருந்தார். நயனும், ஷாருக்கும் இடம்பெறும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

Rajini

அப்போது ஷாருக்கான், விஜய், அட்லீ ஆகிய மூன்றுபேரும் கருப்பு உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. மேலும், ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் எனவும் அந்தப் புகைப்படத்தை வைத்து கதைகள் கிளம்பின. ஆனால் அதுதொடர்பான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ரஜினிகாந்த் ஜவான் செட்டுக்கு சென்றதாகவும் பேச்சு எழுந்தது.

 

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ஜவான் படப்பிடிப்பு செட்டுக்கு சென்றது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் செய்துள்ள ட்வீட்டில், “ஜவான் பட செட்டுக்கு ரஜினிகாந்த் வந்தார். நயன்தாரா நடிக்கும் காட்சிகளை அனிருத்துடன் இணைந்து பார்த்தார். விஜய் சேதுபதியிடம் பல விஷயங்கள் குறித்து பேசினார். விஜய்க்கு அட்லீயும், அவரது மனைவி ப்ரியாவும் சிக்கன் 65 கொடுத்தனர்” என பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.