நான் ஏன் மைக் மோகன் ஆனேன்?… மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் 1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என ஒரு படை ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்க சத்தமே இல்லாமல் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். இவர் நடித்த, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘மெல்லத் திறந்தது கனவு’, ‘மௌனராகம்’, ’விதி’ என இவர் நடித்த பல படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை. இதனால் அவர் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார். கால மாற்றத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கிய மோகன் கடந்த 2008ஆம் ஆண்டு சுட்ட பழம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது மட்டுமின்றி எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதனால் மீண்டும் சைலண்ட் ஆனார் மோகன்.

இந்நிலையில், அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் நடித்திருக்கிறார்.படத்துக்கு ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மோகன், ”என்னுடைய முதல் படம் ‘கோகிலா’(கன்னடம்). பாலுமகேந்திரா பல்கலைகழகத்தின் மூத்த மாணவன் நான். அவர் மூலமாக நான் திரைத்துறையில் அறிமுகமானது எனது பாக்கியம். ‘கோகிலா’ படத்தை இன்று பார்த்தாலும் அது அப்டேட்டாக இருக்கும். கமலின் பிடித்தமான படங்களில் அந்தப் படம் எப்போதும் இருக்கும். பாலுமகேந்திராவின் சிறப்பு அது.

‘ஹரா’ படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. அப்பா – மகள் குறித்து பாசத்தை இப்படம் வெளிப்படுத்தும். என்னுடைய ரசிகர்கள் நான் படத்தில் நடிக்காதபோதும்கூட எனக்காக என்னுடைய பிறந்த நாளில் அன்னதானம் அளிப்பது திருப்தியை கொடுக்கிறது. ஒரு முறை நான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார்கள். ஆக, நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை”

நான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், பாடகராக நடித்தது வெகு சில படங்கள்தான். அந்தப் படங்களில் இளையராஜாவின் இசையில், எஸ்பிபி குரலில் இடம்பெற்றிருந்த பாடல்கள் பெரிய வெற்றியடைந்ததும் என்னை ‘மைக்’ மோகன் என்று மாற்றிவிட்டார்கள்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.