ஆர்எஸ்எஸ் நல்ல மனிதர்களை உருவாக்கும் அமைப்பு- பாஜக மாநில பொதுச் செயலாளர்!

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்திருந்த தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்துடனும், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் திமுக அதன் போர் குணத்தை வெளிகாட்டும் என திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் சீனிவாசன்; மாநில திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசுடன் போர் தொடுக்கட்டும் என்றார்.

மேலும் பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதால் இங்கு அவர் பேசும் சினிமா கதை எடுபாடாது. மத்திய பாஜக அரசு எல்லோரையும் சமமாக பாவிக்கிறது. பாரத பிரதமர் மோடி கூறும் டீமில் இந்தியாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருக்கிறார். இந்த மாதிரி உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியானது இல்லை என்றார். பட்டாசு தொழிலை பாதுகாப்பதில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கில் பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக வரும் எனவும் பட்டாசுக்கு உள்ள பிரச்சனைகளை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சரி செய்ய முயற்சிப்போம் என்றார்.

இந்து சமய அறநிலையத்துறையை சைவ அல்லது வைணவ துறையாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் சீனிவாசன்; திருமாவளவனுக்கு இந்து என்ற வார்த்தையில் என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வி எழுப்பிய சீனிவாசன், திருமாவளவன் ஒரு இந்து என்பதால் தான் பட்டியல் சமுதாய தலைவராகவும், அதன் மூலம் தான் தேர்தலில் தனி தொகுதியில் போட்டியிட முடிகிறது என்றார். மேலும் அவர் தன்னுடைய சாதி சான்றிதழிலில் இந்து என்ற வார்த்தையை எடுத்து விட்டு பேசட்டும் என்றார்.

பேரன் ஆசையை நிறைவேற்றிய தாத்தா பாட்டி!

மேலும் பேசிய அவர் இந்து என்ற வார்த்தை வரலாற்றில் இருந்தது இல்லை என்றால், தமிழன் என்ற வார்த்தை வரலாற்றில் எங்கே இருந்தது. நம்மை மதராஸி என்று தான் அழைத்தார்கள் என்றார். இந்திய வரலாற்றிலும் சரி, தமிழக வரலாற்றிலும் சரி 2000 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாடு என நாடு இருந்ததா என கேள்வி எழுப்பினார். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழக அரசாங்கம் இதை பிரித்து மூன்று நாடுகளாக ஆக்க முன் வந்தால் விசிக தலைவர் திருமாவளவன் கூறியது போல் வைணவ மற்றும் சைவ அறநிலையத்துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சி ஆரம்பித்து இருப்பதை வரவேற்கிறேன் என்றார். இந்தியா ஜனாதிபதி முதல் கடைநிலை தொண்டன் வரை ஆர்.எஸ்.எஸ் என்ற அடையாளத்துடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம், ஆசை படுகிறோம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் ஸ்டாலின், ஆர்.எஸ்.எஸ் கம்யூனிஸ்டாக இருந்தால் சந்தோஷப் படுவோம். ஆர்.எஸ்.எஸ் என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் அமைப்பு.

நாட்டின் பாரம்பரியம், பண்பாட்டின் மீது நம்பிக்கை உடைய அமைப்பு தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்க வேண்டும் எனவும், திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்வின்போது கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் ஜி.பாண்டுரங்கன் உடனிருந்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.