சிவாஜி, நம்பியார், கமல், விக்ரம் வரிசையில் இணைந்த கார்த்தி
திகம்பரசாமியார் படத்தில் நம்பியார் 10 வேடங்களில் நடித்தார், நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், கோப்ரா படத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்தார். இந்த வரிசையில் சர்தார் படத்தின் மூலம் கார்த்தி இணைந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் உளவாளியாக நடிக்கிறார். இதனால் பலவித கெட்அப்களை போட்டுள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கூறியிருப்பதாவது: சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன் என்று பொருள். 'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது.
அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள் தான். கார்த்தி, 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன் . அலப்பறையா இருக்கும்.
வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். மூணு மணிநேரம் மேக்கப்.. அந்த மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க. என்றார் மித்ரன். படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.