நிலைத்தன்மையுள்ள தொழில்நுட்பம் காலத்தின் கட்டாயமா?

“பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நான் ஏதாவது கற்றுக்கொண்டுள்ளேன் என்றால், அது ‘இணைப்பை ஏற்படுத்தும் ஆற்றலும், திறனும் தொழில்நுட்பத்திற்கு உள்ளது’ என்பதாகத்தான் இருக்கும்” என்கிறார் ஒப்போ இந்தியா நிறுவனத்தின் இணை தலைவரான தஸ்லீம் ஆரிஃப்.

மெய்நிகர் சந்திப்புக் கூட்டங்கள் (விர்ச்சுவல் மீட்டிங்) முதல் ஆன்லைன் மளிகை ஷாப்பிங் வரை, தொழில்நுட்பத்தின் புதுமைகள் எப்போதும், ​​எங்கு வேண்டுமானாலும் நம்மை இணைக்கவும், இணைந்து செயல்படவும் அனுமதித்தன. 

பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் போதும், நாம் இன்னும் செல்லவேண்டிய இலக்கினை அடையவில்லை.  வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பொறுப்பானது – தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கற்பனையில் உருவகப்படுத்தி, நிஜத்தில் உருவாக்கி, வடிவமைத்து, இயக்கி, நிர்வகிப்பவர்களிடம் உள்ளது. இந்தக் குழுக்கள் அனைத்து விவரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும், இவை வெவ்வேறு நபர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். தடைகளைக் கண்டறிந்த பிறகு, அவற்றை அகற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து நிலைகளிலும் உள்ளடக்கத்தைச் சாத்தியமாக்கும் ஒரு ஆற்றலாகத் தொழில்நுட்பத்தால் இருக்க முடியும். உள்ளடங்கிய தீர்வுகளை உருவாக்குவது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் டெவலப்பர்களுக்கு மிகவும் அவசியமானது.

Sustainable Technology | நிலைத்தன்மையுள்ள தொழில்நுட்பம்

அடிப்படையில், ‘அணுகக்கூடிய தன்மை’ என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதைக் குறிக்கிறது, உதாரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு. ஸ்மார்ட்போன்கள் அவற்றின் பன்னோக்குத் திறன் கொண்ட இயல்பின் காரணமாக, டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கின்றன; மாற்றுத்திறனாளிகளுக்கு குறைவான செலவில் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (பீஸ்போக்) கருவிகளாகவும் அவை செயல்படுகின்றன. இப்படி அவற்றை விலைமதிப்பற்ற சொத்தாக ஆக்குவது என்னவென்றால் – அது ஒரே சாதனத்தில் பலவிதமான உதவித் தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்கும் திறன் கொண்டது என்பதேயாகும்.

உள்ளடங்கிய தீர்வுகளை உருவாக்குவது

போனிலேயே உள்ளமைக்கப்பட்ட பல பில்ட்-இன் அணுகக்கூடிய அம்சங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் செயலிகள் – ஸ்மார்ட்போன்களில் உள்ள பயனுள்ள தகவல்கள் மற்றும் கன்டென்ட்-ஐ அணுக அனுமதிக்கின்றன. இத்தகைய சௌகரியத்திற்கான தொழில்நுட்ப வசதிகள் தினசரி செயல்பாடுகளை எளிதாக மேற்கொள்ள உதவுகின்றன. அவை ஒருவரை சுதந்திரமாகச் செயல்படவும், சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் செல்லவும், அனைவருக்குமான சமூக உள்ளடக்கம் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதால் இத்தகைய ஸ்மார்ட் தொழில்நுட்பங்களே விழிச்சவால் உள்ளவர்கள் மற்றும் நிறங்களைக் காண்பதில் சவால் உள்ளவர்களுக்கு உதவும் சாதனமாக ஸ்மார்ட்போன்களை மாற்றுகின்றன.

ஸ்மார்ட்போன் சாதனங்களில், அதிக வேறுபாடுகளைக் கொண்ட வண்ணங்களில் திரைகளை இயக்கும் ‘ஹை கான்ட்ராஸ்ட் கலர்ஸ்’ போன்ற குறிப்பிட்ட அணுகும் வசதிகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஹை-கான்ட்ராஸ்ட் கீபோர்டு அல்லது இணைய பயன்பாட்டிற்கான ஹை கான்ட்ராஸ்ட் மோடினை சேர்ப்பதன் மூலம், அணுகக்கூடிய தன்மையை அதிகரிக்க முடியும். கேட்பது, வேறுபடுத்தி காட்டுவது மற்றும் கைகளால் இயக்குவதை எளிதாக்குவது போன்ற இதர அணுகல் அம்சங்களையும் மற்றவை வழங்குகின்றன. நீங்கள் எதை தொடுகிறீர்கள், எதனை செயல்படுத்துகிறீர்கள், எதனை தேர்வு செய்கிறீர்கள் போன்றவற்றை வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சமானது பேசுவதன் மூலம் உங்களுக்கு விவரிக்கிறது.

Sustainable Technology | நிலைத்தன்மையுள்ள தொழில்நுட்பம்

இது பார்வையற்றவர்களுக்கு எழுதியதைத் திருத்த அல்லது தொடு அசைவுகள் (Gesture) பழக்கமான ஸ்வைப்பின் மூலம் செட்டிங்ஸை மாற்ற உதவுகிறது. இந்த அம்சங்களின் மூலம், உடல் ரீதியான சவால் உள்ளவர்கள் அவரின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள் மற்றும் சமூக தொடர்புகளில் உதவியைப் பெறுகிறார்கள்; இவை மனித பார்வையுடனான ஸ்மார்ட்போன் தொடர்புகளால் சாத்தியமாகாது. இன்வெர்ட் செய்யப்பட்ட நிறங்கள் கறுப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துகளை மாற்றிக் காண்பிக்க அனுமதிக்கின்றன; இதற்கு நேர்மாறாகவும் செய்ய முடியும்; அல்லது நீல நிற பின்னணியில் மஞ்சள் எழுத்துகளையும், அதற்கு நேர்மாறாகவும் மஞ்சளில் நீல எழுத்துகளையும் காண முடியும்.

OLED திரைகள் அறிமுகமானவுடன், ஸ்மார்ட்போன்கள் பில்லியன் கணக்கில் வெவ்வேறு வண்ணங்களைக் காண்பிக்கும் திறனும், சிறந்த முறையில் துல்லியமாக வண்ணங்களையும் வழங்கும் திறனும் சாத்தியமானது. ஸ்மார்ட்போன்களில் உள்ள நேச்சர் டோன் டிஸ்ப்ளே மற்றும் கலர் கரெக்ஷன் சொல்யூஷன் போன்ற மேம்படுத்தப்பட்ட ஆப்டிமைசேஷன் வசதிகளின் மூலம் பயன்படுத்துவோர் அவர்களின் பார்வைக்கு ஏற்ற ஸ்க்ரீனை பெறுகிறார்கள்; மற்றும் அவர்களது ஸ்மார்ட்போன் பிரிவில் கிடைக்கும் சிறந்த ஹார்டுவேரையும் பெறுகிறார்கள். இந்த முன்னேற்றங்கள் சிறப்பான கேமிங், திரைப்படம் பார்ப்பது மற்றும் புகைப்படம் எடுக்கும் அனுபவங்களை வழங்குகின்றன. சுற்றுச்சூழலில் எந்தவிதமான பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இந்த பிரத்யேகப்படுத்தப்பட்ட அம்சங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் விரும்புகிறார்கள்.

நிலைத்தன்மை உள்ள தொழில்நுட்பத்தை உருவாக்குதல்

ஒரு நிலைத்தன்மை கொண்ட பிராண்ட் என்பது அதன் வணிக நடவடிக்கைகளில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்னைகளை வெற்றிகரமாக ஒருங்கே சேர்த்து பயணிக்கும். இருப்பினும், தங்களை நிலைத்தன்மை கொண்டதாகக் கருதும் நிறுவனங்கள் இந்த வரையறையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சாத்தியமானதாகக் கருதுகின்றன. நிலைத்தன்மையை நோக்கிய இலக்குகளை நிறைவேற்றுவதற்கு, மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும், அதற்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை தேவைப்படும் என்பதை பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அறிந்திருக்கின்றன. இது ஏற்கெனவே இருக்கும் சவாலை, 360 டிகிரி கோணத்தில் முழுமையாக அணுகக் கோரும்.

Technology | தொழில்நுட்பம்

இருப்பினும், நிலைத்தன்மையை உருவாக்குவதை தொழில்துறை போட்டியில் ஒரு முக்கிய காரணியாக காண்பிக்க, தொழில்நுட்பம் மற்றும் தரவு ஆகியவற்றை ஆரம்பத்திலேயே ஒருங்கிணைக்க வேண்டும். எனவே, தங்கள் நிலைத்தன்மை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களுக்கு, வேகத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக தொழில்நுட்பம் இருக்கும். ஸ்மார்ட்போன் செயலிகள் மற்றும் பிற மொபைல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலைத்தன்மையுள்ள வளர்ச்சி இலக்குகளை முன்னோக்கி கொண்டு வருவதற்கு, ஸ்மார்ட்போன்கள் ஒரு திறன் வாய்ந்த சாதனமாக உள்ளன – அவை கழிவுகளைக் குறைப்பது, பகிர்வது மற்றும் வளங்களின் செயல்திறனை மேம்படுத்துவது போன்ற முன்னெடுப்புகளால் சாத்தியமாகும்.

இப்போது சாதனங்களை பயன்படுத்துவோர் விழிப்புடன் உள்ளனர்; எனவே, தேர்ந்தெடுக்க விரும்பும் பிராண்டுகளில் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். பெரும்பாலான பிராண்டுகள் உற்பத்தியில் 3Rகளின் கொள்கையைப் பின்பற்றுகின்றன – (reduce) நிலைத்தன்மை உள்ள பேக்கேஜிங் மூலம் கழிவுகளைக் குறைத்தல், (reuse) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களை மீண்டும் பயன்படுத்துதல், மற்றும் (recycle) பேக்கேஜிங்கிற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்தல் ஆகியன. எனவே, பசுமையை நோக்கிய பாதையில், ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு 3R+D என்கிற கொள்கையின் நோக்கம் ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும்.

பெரும்பாலான உற்பத்தியாளர்களுக்கு, நிலைத்தன்மையே அவர்களின் வணிகத்தின் மையமாக இருக்கும். எதிர்கால லாப வாய்ப்புகளுக்கு இது அவசியம் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். சிலர் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக தங்கள் மொபைல் சாதனங்களுக்கான சார்ஜிங் அடாப்டர்களை உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளனர்; மற்றவர்கள் வடிவமைப்பு மற்றும் மெட்டீரியல் செயலாக்கம் முதல் பேக்கேஜிங் வரையிலான செயல்பாடுகளில் நிலைத்தன்மை கொண்ட உற்பத்தி செயல்முறையைப் பின்பற்றுகின்றனர். பெரும்பாலான எதிர்கால வாடிக்கையாளர்கள் நிலைத்தன்மையை நோக்கிய பெருநிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டுகிறார்கள்; இதுவே தொழில் நிறுவனங்களிடையே ஒரு சக்திவாய்ந்த போட்டிக்கான கூடுதல் ஆதாயமாகவும் மாறும். அதுமட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு மதிப்பளித்து அவர்களை நுகர்வோர்களாக மட்டுமே கருதாமல், தொழில்நுட்ப படைப்பாளிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் கருதினால் அவர்களுக்கான தேவைகளைக் கண்டறிந்து உதவ முடியும். தொழில்நுட்பத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த வட்டத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

டிஜிட்டல் அஸெட்டுகள்

எந்தவொரு நிறுவனத்திற்கும் அதன் அறிவார்ந்த சிந்தனையை வழிநடத்துவதில், முக்கியத்துவம் அளிக்கப்படும் காரணிகளில் – ‘டிஜிட்டல் திறன் மற்றும் நிலைத்தன்மைக்கான நடைமுறைகளை இணைப்பதற்கு’ முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களில் நிலைத்தன்மை குறித்த உணர்வு இருப்பது, அவர்களின் பிராண்ட்டின் கருத்துக்களைப் பெரிதாக கேட்கச்செய்யவும், அவர்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து, குறிப்பாக இளம் வயதினர் மற்றும் மித வயதினர் மத்தியில் அதிக கவனத்தைப் பெறவும் உதவும். நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய விழிப்புணர்வின் காரணமாக – நிலைத்தன்மை உள்ள, நம்பகமான உள்ளடகத்தினை பெற்ற தொழில்நுட்பம் என்கிற ஒரு சாத்தியமான எதிர்கால கனவினை நாம் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.