நாகை மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாலூரான் படுகையைச் சேர்ந்த கொலை குற்றவாளி செந்தில் (30) என்பவரை கடந்த 22ஆம் தேதி கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை குற்றவாளி செந்தில் சிறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சிறையில் கைது ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in