நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பாலூரான் படுகையைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவர் கடந்த 22 ம் தேதி தனது கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொலை விசாரணை கைதி செந்தில் இன்று சிறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செந்திலின் உடலை கைப்பற்றிய போலீசார், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்திலை போலீசார் கைது செய்தபோது புகைப்படமும் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் :
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் – 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]