சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தனது சொத்துக்களை தனது மூத்த மகனுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் முதுமையற்ற காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.
இந்த வழக்கு குறித்து பேசிய நீதிபதி ஆஷா தங்களது சேமிப்புகளை செலவு செய்தும், நகைகளை விற்றும் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு இதயமற்றது என்று விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.