Online Train Ticket Cancellation: சுற்றுப் பயணம் அல்லது வெளி ஊர்களுக்கு திட்டமிடும் பலரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அத்தகைய சூழலில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்ப கொடுக்கும்.
சிலருக்கு ஒட்டுமொத்தமாக புக் செய்த டிக்கெட்டுகளை எப்படி கேன்சல் செய்வது அல்லது ஒரு குழுவில் இருக்கும் ஒருவரின் டிக்கெட்டை மட்டும் எப்படி கேன்சல் செய்வது? என்ற சந்தேகம் இருக்கிறது. ஐஆர்சிடிசியில் அதற்கான ஆப்சன் இருக்கிறது. ஒரு குடும்ப பயணத்தில் ஒரு குறிப்பிட்ட சில நபர்களின் அல்லது ஒரு சிலரின் டிக்கெட்டை மட்டும் கேன்சல் செய்ய முடியும்.
ஐஆர்சிடிசி வெப்சைட்
முதலில், உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் IRCTC இ-டிக்கெட் இணையதளத்துக்கு செல்லுங்கள். சரியான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். இப்போது டிக்கெட்டை ரத்து செய்ய, ‘MY Transactions’ என்பதற்குச் சென்று, ‘MY Account மெனுவிற்குச் செல்ல வேண்டும். அதில் Booking Ticket History என்பதைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் தகவலைப் பார்ப்பீர்கள். இப்போது நீங்கள் ரத்து செய்ய விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, ‘கேன்சல் டிக்கெட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பணத்தை திரும்ப பெறலாம்
‘கேன்சல் டிக்கெட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ரத்து செய்ய விரும்பும் பயணிகளின் பெயரைத் தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் உறுதிப்படுத்தலுக்கு ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யவும். ரத்துசெய்தல் முடிந்ததும், ரத்துசெய்த தொகையைக் கழித்த பிறகு டிக்கெட் பணம் உங்கள் கணக்கில் திருப்பித் தரப்படும். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலிலும் இதற்கான உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.