இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை உள்ளது. அங்கு கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி தண்டனை அனுபவித்து வந்தார்.
அவருக்கு தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028ஆம் ஆண்டு விடுதலையாக இருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, அவர் சிறையின் சமையலறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் விழுந்தார். அதில் உடல் முழுவதும் வெந்துபோன அந்த கைதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு உயிருக்குப் போராடிவந்த அவர், 10 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
newstm.in