மான்செஸ்டரில் 15 நிமிட கார் பயணத்திற்கு கோடிக்கணக்கில் கட்டணம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இளைஞர்
வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேசியதால் இளைஞருக்கு தெரிய வந்த உண்மை
பிரித்தானிய நபர் ஒருவர் டாக்சியில் பயணித்ததற்கு தவறுதலாக 35 ஆயிரம் பவுண்ட்கள் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மான்செஸ்டர் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு செல்ல ஓலிவர் கப்லன் (22) என்ற இளைஞர் கார் டாக்சியை செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.
அந்த இடத்திற்கு செல்ல இலங்கை மதிப்பில் 4403 ரூபாய் (10 பவுண்ட்கள்) மட்டுமே கட்டணம் ஆகும்.
ஆனால், ஓலிவருக்கு இலங்கை மதிப்பில் ஒரு கோடியே 42 லட்சத்து 44 ஆயிரத்து 140 ரூபாய் (35 ஆயிரம் பவுண்ட்கள்) என கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
New York Post
இதனைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின்னர் அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மதுபான விடுதியின் பெயரும் அவுஸ்திரேலியாவில் உள்ள மதுபான விடுதியின் ஒன்றாக இருப்பதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மேலும் ஓலிவரின் வாங்கிக் கணக்கில் அவ்வளவு பெரியத் தொகை இல்லாததால் கட்டண பிடித்தம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த குழப்பத்தால் அரைமணி நேரம் மன அழுத்தத்தில் இருந்ததாக ஓலிவர் தெரிவித்துள்ளார்.
New York Post