உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதிய ஜெனரலாக செர்ஜி சுரோவிகின் என்பவரை நியமித்து அவரை படைகளின் தளபதியாக்கியுள்ளது.
லித்துவேனியாவை சேர்ந்த அர்னால்ட் கிபீசா என்ற மோட்டார் சைக்கிள் வீரர், 580 மீட்டர் 120 செமீ தூரம் கைகளை பயன்படுத்தாமல் வீலிங் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் அபய்த் உல்லாஹ் என்ற அமைச்சர் ஒருவர் அந்நாட்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் -அமெரிக்கா இடையேயான தரவு பரிமாற்ற ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இலங்கையின் மனித உரிமை தொடர்பான தீர்மானத்திற்கு ஐநாவில் வாக்களிக்காமல் தவிர்த்தது இந்தியா.
ரஷ்யாவையும் கிரிமியா பகுதியையும் இணைத்த ஒரே பாலத்தில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரைனிற்கு நிவாரண நிதியாக 1.3 பில்லியன் டாலர்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
செர்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள், அவர்கள் கண்டெடுத்த புதிய வகை வண்டு வகைக்கு, அந்நாட்டின் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பெயரையே சூட்டியுள்ளனர்.