உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் உயிரிழப்பு; மாநில அரசு தகவல்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் பலியானதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு தொடர்பான சம்பவங்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒன்பது பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 6ம் தேதி கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்தனர். சீதாபூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மட்டும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர்.

மின்னல் தாக்கத்தால் ஏழு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் நீரில் மூல்கி ஆறு பேர் இறந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி வரும் 14ம் தேதி வரை இடியுடன் மழை இருக்கும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.