சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு பிரிவும் இயங்கி வருகிறது.
இதில் ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சிவசேனா கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரினார்.
இதனை அடுத்து வில் அம்பு சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளதை அடுத்து வேறு சின்னம் வேண்டுமென உத்தவ் தாக்கரே விண்ணப்பித்துள்ளார்.
உதய சூரியன், திரிசூலம் அல்லது தீப்பந்தம் ஆகிய மூன்று சின்னங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.