ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு ஒரு புதிய வரிசை உள்ளது.
அதன்படி, இளவரசர் ஹரி ஒருபோதும் பிரித்தானிய மன்னர் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பிரித்தானிய அரச குடும்பத்தை பொறுத்தவரை இளவரசர் ஹரி பெரும்பாலும் அரசராகவே முடியாது, ஆனால், ஏதோ ஒருவகையில் அரியணை வாரிசு வரிசை உடைந்தால் அது நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு மன்னர் மூன்றாம் சார்லஸை தொடர்ந்து வில்லியம் அவரது பிள்ளைகள் என ஒரு புதிய வரிசை உள்ளது.
BY SAMIR HUSSEIN/WIREIMAGE
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் அரசு மற்றும் அரசியலமைப்பு பேராசிரியரான ராபர்ட் ஹேசலின் (Robert Hazell) கூற்றுப்படி, சார்லஸ் ராணிக்கு முன்பே இறந்திருந்தால் மட்டுமே இளவரசர் வில்லியம் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குப் பிறகு நேரடியாக அரசராகியிருக்க முடியும்.
வில்லியம் மன்னராகும்போது, கேட் ராணி ஆவார். வில்லியம் மன்னராவதைத் தடுக்க அவரது சொந்த அகால மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று ராபர்ட் ஹேசல் கூறுகிறார்.
பக்கிங்ஹாம் அரண்மனையால் நிர்ணயிக்கப்பட்ட வாரிசு வரிசையின்படி, இளவரசர் வில்லியமிற்கு பிறகு அவரது குழந்தைகள் பின்னால் இருப்பதால், இளவரசர் ஹரி அரியணையைப் பார்க்கவே மாட்டார்.
BY DOMINIC LIPINSKI/GETTY IMAGES
வில்லியமுக்குப் பிறகு, அவரது மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ், அரச அரியணைக்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, அவரது உடன்பிறப்புக்களான இளவரசி சார்லோட்டும் இளவரசர் லூயிஸும் இருக்கிறார்கள்.
வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் குழந்தைகள் அரியணை ஏற தகுதியில்லாமால் போனால் மட்டுமே, இளவரசர் ஹாரி அரசராக முடியும்.
ஹரி அரச வாழ்க்கையிலிருந்து பின்வாங்கினாலும் அவர் இன்னும் அரச பரம்பரையில் இருக்கிறார் என்பதும் உண்மையே.