Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் – போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று மதியம் (அக். 10) சென்றுள்ளது. 

அப்போது, அவர்கள் கட்டடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தியபோது, திடீரென லிஃப்ட் பழுதானது. அதில், ஒரு சிறுவன், மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். லிஃப்ட பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். 

ஏறத்தாழ ஒருமணி நேரமாக லிஃப்டில் அவர்கள் சிக்கியிருந்த நிலையில், அந்த வளாகத்தில் இருந்து காவல் நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த காவலர் குகன் என்பவர் காவல் கட்டப்பாட்டு அறையை தொடர்புகொண்டு சம்பவம் குறித்து விவரித்துள்ளார். இதையடுத்து, பாண்டி பஜார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

தொடர்ந்து, காவலர் குகன் உள்பட மூன்று காவலர்கள் லிஃப்டின் கதவை கடப்பாரையை கொண்டு உடைத்தனர். தொடர்ந்து, போராடி கதவை உடைத்து உள்ளே மாட்டியிருந்த ஏழு பேரையும் மீட்டனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டில்  சிக்கித்தவித்த ஏழு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

சரியான சமயத்தில், சிறப்பாக செயல்பட்டு லிஃப்டில் மாட்டிய அனைவரையும் பத்திரமாக மீட்ட காவலர்களை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாராட்டினர். தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட காவலர்கள் பலரும் அவர்களின் சமயோஜித்த செயலுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.