திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை மற்றும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் 6 கி.மீ. தொலைவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 2 நாட்கள் வரை வரிசையிலேயே சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஞாயிறன்று மட்டும், திருப்பதி ஏழுமலையானை 86,188 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 41,032 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
சுவாமிக்கு உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.5 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, சுவாமியை தரிசனம் செய்ய 20 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.