தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ஏன் காற்று மாசுபாட்டை அதிகரிக்க விரும்புகிறார் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு டெல்லி அரசும் தடை விதித்தது.
இதனை நீக்கக் கோரி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு முன் மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது.