விருத்தாசலம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 மாணவர்களுக்கு பலத்த காயம்..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, முருகன்குடி ஆகிய பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி வேனில் தினமும் அழைத்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் பெண்ணாடத்தில் இருந்து இரண்டு வேன் மூலம் பள்ளி மாணவர்களை அழைத்து வந்தனர். அப்பொழுது விருத்தாசலம் அருகே கோ.ஆதனுர் கிராமம் அருகே வரும்போது ஒரு வாகனத்தை விருத்தகிரியும் இன்னொரு வாகனத்தை வெற்றிசொல்வனும் ஓட்டி வந்தனர்

அப்போது வெற்றிச்செல்வன் விருத்தகிரி வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது விருத்தகிரி வாகனத்தில் மோதி பள்ளி வாகனம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 13 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் மற்றொரு வாகனத்தில் வந்த 16 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதில் காயமடைந்த மருதமலை, ஜெயபாரதி, ஸ்வேதா, அபிராமி, ஹரிகிருஷ்ணன், தமிழ்வேல், அபர்ணா, விஜயலட்சுமி, உள்ளிட்ட 16 பள்ளி மாணவர்கள் மற்றும் நடந்து சென்ற கூலி தொழிலாளி வேம்பும் காயம் அடைந்தனர்.

அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோ.ஆதனூர் கிராம மக்கள் சாலையின் குறுக்கே கட்டைகள் போட்டு சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரே பள்ளியைச் சேர்ந்த பள்ளி வாகனம் போட்டி போட்டு ஒட்டி வந்ததால் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.