திமுக அரசு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களை வஞ்சித்து விட்டதாக போராட்டம்!
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதி துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். நிதிச்சுமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடக் கூடாது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 70 வயதைக் கடந்த அரசு ஊழியர் ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயதுக்கான ஓய்வூதியத்தை வழங்கப்படும். அதேபோல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ன உறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட மின்சார வாரிய அலுவலகம் நுழைவாயில் முன்பு சுமார் 10க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற மின்சார ஊழியர்கள் சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற மின்சார துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்