பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள பிரபல இயக்குநரை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற டெல்லி மகளிர் ஆணையம் வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்கு ஆதரவாக பல்வேறு பெண்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் பெண்களும் தங்களின் எதிர்ப்புக் குரலை உயர்த்தி வருகின்றனர்.
இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். MeeToo இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA) 2018ஆம் ஆண்டில், ஓராண்டு சஸ்பெண்ட் செய்தது. புகழ்பெற்ற ‘ஹவுஸ்ஃபுல் 4’ என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக 2018ஆம் ஆண்டில் அவர் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமே் என டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும், பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லிவால் ட்விட்டரில் வெளியிட்டார்.
அவரின் பதிவில்,”MeToo இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தனர். அந்த புகார்களும், சஜித் கானின் அருவறுக்கத்தக்க மனநிலையைதான் காட்டுகிறது. அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், இது மிகவும் தவறானது. இதனால், அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.
He had flashed his private part at me & asked me to rate it on a scale of 0 to 10. I’d like to enter into the house of Big Boss & give him the rating!
Let watch how a survivor deals with her molester!Pls take a stand! @BeingSalmanKhan
Read more at: https://t.co/j8kPljB1s6
— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा) (@SherlynChopra) October 10, 2022
இந்நிலையில், இயக்குநர் சஜித் கானை பிக்பாஸ் தொடரில் வெளியேற்றுமாறு கூறிய பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, அத்துடன் அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மீ டூ இயக்கத்தித் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில், ஷெர்லினும் ஒருவர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, இதற்கு 0 – 10 வரை மார்க் போடச் சொல்லி சொன்னார். தற்போது, அந்த பிக்பாஸ் வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லைக் கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார். மேற்கூறிய கருத்துகளை அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியின் இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பிரபல பிளேபாய் இதழின் முகப்பு, ஷெர்லின் சோப்ராவின் நிர்வாணப் புகைப்படத்துடன் வெளியானது. அந்த இதழின் முகப்பில் இந்தியர் ஒருவர் நிர்வாணப் புகைப்படம் வெளியானது அதுவே முதல் முறையாகும்.