பாகிஸ்தானை மிரட்டும் மலேரியா… இந்தியாவிடம் இருந்து கொசு வலைகள் வாங்க திட்டம்!

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழை ஏற்பட்டத்தை தொடர்ந்து பாக்கிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்; 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் . நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்நிலையில், செப்டம்பரில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ள பாதிப்பு காரணமாக மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு பெருமளவு அதிகரித்து  “இரண்டாவது பேரழிவை” ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள 32 மாவட்டங்களில் ஜனவரி 2023க்குள் 2.7 மில்லியன் மலேரியா தொற்று பாதிப்புகள் ஏற்படலாம் என கடந்த வாரம்,   WHO எச்சரித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சுகாதார அமைச்சகம், இந்தியாவிடமிருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான கொசு வலைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என செவ்வாய்க்கிழமை வெளியான ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO), குளோபல் பண்ட் வழங்கிய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் கொசு வலைகளைப் வாங்க திட்டமிட்டுள்ளது என்று ஜியோ டிவி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.  கூடிய விரைவில் கொசுவலைகளைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த மாதத்திற்குள் வாகா வழியாக கொசுவலைகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் WHO அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது.

மேலும் படிக்க | வீட்டில் கிடைத்த ‘அரிய’ புதையல்; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தம்பதி!

“நாட்டின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 மாவட்டங்களில் மலேரியா வேகமாக பரவி வருகிறது, அங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொசுக்களால் பரவும் மாலேரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் இந்தியாவில் இருந்து கொசுவலை வாங்க அனுமதி கோரியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிந்து, பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் ஆகிய 26 மாவட்டங்களில் கொசு வலைகளை வழங்க ஏற்பாடு செய்ய குளோபல் ஃபண்டி நிறுவனத்திடம் நிதி உதவி கோரியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார். 

காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த பிறகு இருதரப்பு உறவுகள் முறிந்தன.

இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் புது டெல்லியுடனான தூதரக உறவுகளை  முறித்துக் கொண்டு இந்திய தூதரை வெளியேற்றியது. அன்றிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Video: காரில் பர்கர் சாப்பிட்டது குத்தமா… துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்த போலீஸ் – வேலை காலி…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.