தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு


பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் முன்னாள் பல்பொருள் அங்காடிக்கு அடியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதி குழந்தைகளுடையது என்பது தெரியவந்துள்ளது.

வேல்ஸில் உள்ள பெம்ப்ரோக்ஷயரில் உள்ள ஒரு முன்னாள் பல்பொருள் அங்காடியின் (Ocky White) அடியில் 240-க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாதி குழந்தைகளுடையது.

இந்த அகழாய்வில், ஹேவர்ஃபோர்ட்வெஸ்டில் உள்ள ஃபோர்னர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஓக்கி ஒயிட் தளத்திற்கு கீழே ஒரு இடைக்கால மடாலயம் (priory) இருந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிபுணர்கள் விவரித்துள்ளனர்.

தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு | Uk Skeletons Department Store WalesBBC

இந்த தளம் செயின்ட் சேவியர்ஸ் என்ற பெயருடையது என்று அவர்கள் நம்புகிறார்கள், இது சுமார் 1256-க்கு முந்தைய கிறித்துவ மடாலயம் என்று கூறுகின்றனர்.

இது 1700-களின் முற்பகுதி வரை பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இந்த மடலாய வளாகத்தில் ஒரு கல்லறை, தங்குமிடங்கள், மருத்துவமனை மற்றும் தொழுவங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்ததாக கருதப்படுகிறது.

தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு | Uk Skeletons Department Store WalesBBC

Dyfed தொல்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த தள மேற்பார்வையாளர் Andrew Shobbrook, “இது புதைக்கப்படுவதற்கு மிகவும் மதிப்புமிக்க இடமாக இருந்ததாகவும், இங்கு செல்வந்தர்கள் முதல் பொது நகர மக்கள் வரை உள்ளனர் என்று கூறினார்.

தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் போரின் போது ஏற்பட்ட காயங்களின் வகைக்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

1405-ல் பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் கிளர்ச்சியாளர்களால் ஹேவர்ஃபோர்ட்வெஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையால் இறந்தவர்களில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு | Uk Skeletons Department Store WalesBBC

Ocky White பல்பொருள் அங்காடி 2013-ல் மூடப்பட்டது. இந்த ஆற்றங்கரை தளத்தில் கூரை மொட்டை மாடி மற்றும் பார் உள்ளடங்கிய உணவு எம்போரியமாக மறுவடிவமைக்கப்படஉள்ளதால், அதற்கு முன்னதாக அகழாய்வு வேலைகளை தீவிரமாக செய்துவருகிறது Dyfed தொல்பொருள் அறக்கட்டளை.

தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு | Uk Skeletons Department Store WalesLDRS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.