தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர்.
இதையடுத்து, இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாங்கள் பெற்றோர்களாகிவிட்டதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தது பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள நிலையில், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
To all those telling me to mind my business,as someone who qualified to be a lawyer, I am certain legal analysis counts . And unlike the issue being discussed, my views are given completely altruistically , non commercially and after more than five years of being eligible.
— Kasturi Shankar (@KasthuriShankar) October 9, 2022
அந்த வகையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,”இந்தியாவில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர. இது ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்த சட்டம்.
அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய தகவல்களை பெறுவோம்” என கடந்த அக். 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் பதிவிட்ட சில மணிநேரங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்களை முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும், மருத்துவம் தெரியும் என்று சொல்லி, சில தரங்கேட்ட கோமாளிகள் பேட்டி குடுக்கறதும், ட்வீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்” என பதிவிட்டுள்ளார்.
Spoiling the most beautiful moments of someone’s life must be punishable under the law first . Legal theriyum medical theriyumnu sila worthless clowns interview kudukrathum tweet podrathum . Thirunthavemattanga. God is watching and knows to give Who what .
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 11, 2022
இந்த பதிவு நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. தொடர்ந்து, இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகை வனிதா தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | வாடகை தாய் சர்ச்சை : நயன்தாரா விவகாரத்தில் தீவிரம் காட்டும் அரசு – விரைவில் அறிக்கை?