தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இளம் நடிகர்கள் முதல் சீனியர் நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்திருக்கும் அவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற அவருக்கு, பொன்னியின் செல்வன் படம் புது அடையாளத்தையும், சிறப்பையும் திரிஷாவுக்கு கொடுத்திருக்கிறது.
ஸ்டார் நடிகையாக இருக்கும் திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்பட புரோமோஷனையொட்டி பல தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அவருடன் சம காலத்தில் திரையுலகில் அறிமுகமானவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதால், அவரிடம் தொடர்ச்சியாக இந்த கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் கூட கேட்கப்பட்ட கேள்விக்கு நச் என பொட்டில் அடித்தாற்போல் தன்னுடைய பதிலை கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் திருமணம் குறித்த கேள்விக்கு திரிஷா பதில் அளிக்கும்போது, ” மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டால்கூட பதில் சொல்லுவேன். ஆனால், யாரவது ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. திருமணத்துக்கு பிறகு விவகாரத்து என்பதே எனக்கு வேண்டாம். விவகாரத்தின்மீதும் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்ட வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் முடிப்பேன்” என்று பதிலளித்துள்ளார்.