நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் – நாளை தொடங்குகிறது விசாரணை?

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டை அடுத்து பலரும் பல யூகங்களை கிளப்பினர். ஆனால் நயனும், விக்னேஷ் சிவனும் வாடை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. அதனையடுத்து பலரும் நயனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவிததுவருகின்றனர். குறிப்பாக நடிகை கஸ்தூரி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக ட்வீட் செய்ய, நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுப்பினர்.

 

நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதும் இந்த விவகாரம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது. மேலும் நயன்தாராவுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலில் அந்த மருத்துவர்களிடம், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் விதிகளை பின்பற்றித்தான் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனரா என்பது குறித்து நாளை விசாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இருவரும் விதிகளை மீறியிருந்தால் அந்த மருத்துவமனை மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது.

அதேசமயம், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்றும் கருதப்படுகிறது.

முன்னதாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு, தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தம்பதியில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.