திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் அருகே உள்ள திருவண்ணாமலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஈச்சர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றொருவர், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஏழுமலை இன்று காலை அணில்கொட்டா கிராமத்தில் உள்ள தேசிங்கு என்பவரை பெயிண்டர் பணிக்காக அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து ஈச்சர் வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு சென்ற ஈச்சர் லாரி, திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் அருகே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெயிண்டர் ஏழுமலை மற்றும் தேசிங்கு ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர், இதில் பெயிண்டர் ஏழுமலை சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் தேசிங்கு என்பவர் பலத்த ஆயிரத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஏழுமலை உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய ஈச்சர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.