சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! அதுவும் இந்த இயக்குனரின் படத்திலா?

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கதாநாயகனாக மீண்டும் சிம்பு உருவெடுத்து விட்டார், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  சிம்பு, நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்து வருகிறது.  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அது நடக்காமல் போன நிலையில் தற்போது சிம்புவுடன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவை வைத்து இயக்கி ‘சூரரை போற்று’ படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா சிம்புவை வைத்து ஒரு பான் இந்தியா திரைப்படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது, அந்த திரைப்படத்தில் தான் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும், படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு பாதியில் தொடங்கப்படும் என்றும்  தகவல்கள் வெளியாகியிருக்கிறது.  சூரரை போற்று படத்திற்கு கிடைத்த வெற்றியையும், வரவேற்பையும், விருதையும் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிய படத்தை உருவாக்கவிருக்கிறார், இந்த படத்தை தொடர்ந்து சிம்பு-கீர்த்தியை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.  தற்போது இயக்குனர் ‘சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார்.

ஆனால் சிம்பு-கீர்த்தி நடிக்கும் படம் குறித்து இன்னு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது சிம்பு ‘பத்து தல’ படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.  அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் கைவசம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ மற்றும் ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ போன்ற படங்கள் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.