சபாநாயகரை சந்தித்த ஓபிஎஸ்… எடப்பாடி தரப்பிற்கு சரியான செக்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எந்தவித மாற்றமும் சபாநாயகர் அப்பாவு செய்யவில்லை. இது

தரப்பிற்கு சாதகமாக முடிந்துள்ளது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து விட்டனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் தகவல் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்தோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக சபாநாயகரை சந்தித்து வந்துள்ளோம் என்றார்.

அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பொறுத்தவரை இன்றைய தினம் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறினார். அதிமுக 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூழலில் கட்சிக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக தான் எம்.ஜி.ஆர் தொடங்கினார்.

மூன்று முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தார். நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்று 30 ஆண்டுகள் சிறப்பான முறையில் கட்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பணியாற்றினார். மக்களுக்கு என்ன தேவையோ? அதை திறம்பட நிறைவேற்றிக் கொடுத்தார்.

இருபெரும் தலைவர்களும் அதிமுகவிற்காக செய்த தியாகங்களால், தொண்டர்கள் சிந்திய ரத்தத்தால் வளர்ந்தது தான் இந்த இயக்கம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய மற்றும் ஜெயலலிதா அவர்கள் போற்றி பாதுகாத்து வந்த விதிகளை அப்படியே எந்தவித மாசும் ஏற்படாமல் கட்டி காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், சிரமங்கள் வந்தாலும் கட்சியை பாதுகாக்கும் நபர்களாக தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். தமிழக மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவினை அளித்து கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் அடித்தளம், ஆணிவேர்.

அந்த தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய அந்தஸ்தை தந்துள்ளார்கள். ஒரு சாதாரண தொண்டன் கூட கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வர முடியும் என்ற சட்ட விதியை வகுத்து தந்துள்ளார்கள். தற்போதுள்ள கட்சியின் சட்ட விதிகளை மாற்றும் சூழல் என்பது அபாயகரமான சூழல். அப்படி செய்வது எம்.ஜி.ஆரின் ஆன்மாவிற்கு கலங்கம் ஏற்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டார். இதன்மூலம் எடப்பாடி தரப்புடன் ஓபிஎஸ் தரப்பு விடாமல் போராடும் என்பது தெரியவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.