பலாத்கார குற்றவாளிகளுக்கு மோடி துணை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக செங்கோட்டையில் இருந்து பேசுகிறார்கள்; ஆனால், உண்மையில் பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள் என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு நேற்று பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து, பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், குஜராத் அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2002-ம் அண்டு நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் கைதான 11 பேரை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக செங்கோட்டையில் இருந்து பேசுகிறார்கள்; ஆனால், உண்மையில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள். பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரிகிறது. பிரதமர் பெண்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அதே நாளில் தான் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.