நம்பூதிரி பெண்ணாக மாறிய அமலாபால்
இயக்குனர் விஜய் உடனான திருமண முறிவுக்கு பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் சரியாக கவனம் செலுத்தவில்லையா அல்லது அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததா என்று சொல்லத்தக்க வகையில் கடந்த மூன்று வருடங்களில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரே தயாரித்து நடித்த கடாவர் திரைப்படம் வெளியானது. இந்தநிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மலையாள திரையுலக பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமலாபால், கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேப்போல கதையின் நாயகியாக டீச்சர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கிராமத்து பின்னணியில் உருவாகும் த்விஜா என்கிற படத்தில் நம்பூதிரிப் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடிக்கிறார் அமலாபால். வெள்ளை ஆடை அணிந்து வெறுங்காலுடன் அமலாபால் குடை பிடித்தபடி நிற்கும் கதாபாத்திர போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தேசிய விருது பெற்ற ஹமித் என்கிற படத்தை இயக்கிய அய்ஜாஸ் கான் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை தயாரித்த பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இன்னும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றன.