மொத்த குடும்பமும் வீட்டில் சடலமாக கிடந்தது எப்படி? ஆங்காங்கே கிடந்த கத்திரிக்கோல்கள்


இந்தியாவில் வீட்டில் மொத்த குடும்பமும் சடலமாக கிடந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.
சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு நாகராஜூ தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் தரையிலும் சடலமாக கிடந்தனர்.விசாரணையில் மூவரையும் நாகராஜூ கத்திரிக்கோலால் குத்தி கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து டைலரிங் பணிக்காக சுஜாதா வைத்திருந்த கத்திரிக்கோல்களை பொலிசார் கைப்பற்றினர்.

மொத்த குடும்பமும் வீட்டில் சடலமாக கிடந்தது எப்படி? ஆங்காங்கே கிடந்த கத்திரிக்கோல்கள் | Family Died Hyderabad Killed Suicide Investigation

newindianexpress

குடும்பத்தில் பண பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் சுஜாதாவுக்கு முன்னர் வேறு நபருடன் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இந்த தகவலை பொலிசார் முழுமையாக உறுதி செய்யாத நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.