தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் நள்ளிரவு ஒரு மணி வரை கடைகள் மற்றும் வியாபார தளங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் பொதுமக்கள் தீபாவளிக்கு சிரமமின்றி, கோவை மாநகருக்குள் வந்து செல்ல மாநகர காவல்துறையின் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மக்களின் பாதுகாப்பை மேம்படுத்த கடைத்தெருக்களில் 750 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.
நேற்றுக் கோவை கடைவீதிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை முடிவில் கடைகளை நள்ளிரவு வரை திறந்து வைக்கவும், பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.