சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் 24 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.