சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண்மணி ஒருவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி, பெரம்பூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண்ணுக்கு ஐந்தரை வயதில் ஒரு மகள் இருக்கின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் இருக்கும் ஒரு கடைக்கு பிஸ்கட் வாங்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஒரு நபர் குழந்தையை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். இதை அவரது குழந்தை அழுது கொண்டே வந்து அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளது.
இதனால் விரைந்து சென்ற அந்த தாய் கடையில் அந்த நபரை தேடினார். ஆனால், அவரை காணவில்லை தொடர்ந்து நேற்று காலையும் குழந்தை கடைக்கு சென்றபோது அந்த நபர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார். இதனால், அழுது கொண்டே வந்த சிறுமி மீண்டும் தனது தாயிடம் கூறியுள்ளார்.
சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று இந்த கேவலமான செயலில் ஈடுபட்ட நபரை அந்த தாய் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து அவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் ரஹ்மத் 45 வயது என்பதை கண்டறிந்தனர்.
ரஹ்மத் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இருக்கிறார். பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த நிலையில் அவர் இப்போது எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.