ஹோபர்ட்,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஸ்காட்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அந்த நம்பிக்கையுடன் அந்த அணி இன்று களம் இறங்குகிறது.
அதே வேளையில் அயர்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனவே அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.