தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப்பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் – இருவர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி எனும் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 17-ம் தேதி மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேசைகள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றி இறக்குவதற்கு, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அம்மாணவர்கள் டிராக்டரின் பின்பகுதிகளில் நின்றபடி மேசைகளை பிடித்தவாறும், என்ஜின் பகுதியில் சக்கரத்திற்கு மேற்பகுதியில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிராக்டரில் மாணவர்கள்

சுமார் 5 கி.மீ தூரம் வரையில் இவ்வாறு ஆபத்தான நிலையில், மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்களை இந்த பணிக்காக பயன்படுத்திய அரசு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பழனி, தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.