சென்னை: கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த தனி நபரை நியமிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.