TNTET தேர்வு… TRB நியமனங்களுக்கு வந்தது மாற்றம்- அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணி நியமனங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை டெட் தேர்வு என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக தகுதி உடையவர் என்று கூறி அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டு விடும். அதன்பின்னர் வேலை நியமனத்திற்கு எனத் தனியாக தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுகளை எழுத பொதுப்பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 40 என்றும், இதர பிரிவினருக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சேர டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும். இதனை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தாள் ஒன்றில் 2.30 லட்சம் பேரும், தாள் இரண்டில் 4.18 லட்சம் பேரும் எழுதுகின்றனர். முதல் தாள் தேர்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.