குரங்கின் கண்ணீர் அஞ்சலி

கொழும்பு: கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டில் சமூக வலைதளங்களே அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
அந்தவகையில் நமது அன்றாட வாழ்வில் நிகழும் மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, கோபம் என அனைத்து உணர்வுகளையும் வெளி உலகிற்குக் கொண்டு வருவதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றுக்கின்றன.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் வீடியோ ஒன்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களைவிட , விலங்குகள் அன்பானவை என நாம் கேள்விப்பட்டிருப்போம். அதனை உணர்த்தும் சம்பவமும் அடிக்கடி நிகழும். அவ்வாறு ஒரு சம்பவம்தான் இலங்கையில் நடந்திருக்கிறது.

இலங்கையின் மட்டக்களப்பில் தனக்கு தினமும் உணவளித்த ஒருவரின் இறப்பை தாங்கிக் கொள்ளாத குரங்கு அவரின் உடல் அருகே நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரின் மனதையும் கலங்கடித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.