கியே
இந்தியா உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது, கியேவில் உள்ள இந்திய தூதரகம். பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், சமீபகாலமாக அதிகரித்து வரும் போர்களை’ மேற்கோள்காட்டி உள்ளது.
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், உக்ரைன் முழுவதும் சண்டைகள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர்கள் உட்பட இந்தியர்கள், கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24 அன்று போரின் தொடக்கத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு எதிராக ரஷியா மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அக்டோபர் 11 க்குப் பிறகு இந்தியத் தரப்பில் இருந்து இது இரண்டாவது அறிவிப்பு ஆகும். ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா தனது “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தி உள்ளது.
போரின் ஆரம்ப கட்டத்தில் உக்ரைனில் இருந்த கிட்டத்தட்ட 20,000 இந்தியர்களை வெளியேற்ற இந்தியா நடவடிக்கைமேற்கொண்டது. 500 இந்திய குடிமக்கள் தொழில்முறை அல்லது குடும்ப காரணங்களுக்காக “குடியிருப்பு அனுமதி” வைத்திருப்பதால் உக்ரைனில் தங்கியிருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.