காதி சபைத் தலைவர், அங்கத்தவர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 115ஆம் சரத்திற்கு இணங்க அரசாங்க நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ள காதி சபையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வரத்தமானி அறிவிப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் 40வயதிற்கு மேற்பட்ட, திருமணம் செய்த முஸ்லிம் ஆண்களாக இருத்தல்,

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகக்கழகமொன்றின் பட்டத்தை அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் மௌலவி சான்றிதழ்

அல்லது

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அல்- அலிம் சான்றிதழ்

அல்லது

சட்டத்தரணி (Attorney-at-Law )   அல்லது அது தொடர்பான தகைமை

அல்லது

ஓய்வு பெற்ற அரச அதிகாரி (Staff Grade Officer) / தற்போது நீதித்துறையில் பணிபுரிதல்

ஆகியன இதற்கான அடிப்படைத் தகைமைகளாகும்.

ஆனால் நீதித் துறை அல்லாத அரச சேவையில் நிரந்தர பதவியொன்றில் அதிகாரியாக தற்போது பணி புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு விண்ணப்பப்பிக்கத் தகைமை வழங்கப்படவில்லை.

வர்த்தமானி அறவித்தலில் வழங்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கு அமைய சுயமாகத் தயாரித்த விண்ணப்பப் படிவத்தை 04.11.2022 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக, பதிவுத் தபாலில், சிரேஷ் ட உதவிச் செயலாளர், காதிப் பிரிவு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம், தபால் பெட்டி இலக்கம் 573, கொழும்பு 12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வரத்தமானி அறிவிப்பு

http://documents.gov.lk/files/gz/2022/10/2022-10-07(I-IIA)T.pdf

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.