புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரு வீதி மற்றும் எம்.ஜி., ரோடு மக்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடகளை எஸ்.பி, வம்சிதரெட்டி ஆய்வு செய்தார்.
தீபாவளி காரணமாக புதுச்சேரியின் கடை வீதிகளில் கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.
அதனையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளதாலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், துணிகள், பட்டாசு மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
இதனால், நேரு வீதி, காந்தி வீதி, ரங்கப்பிள்ளை உள்ளிட்ட வீதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. இக்கூட்டம் நேற்று மாலை மேலும், அதிகரித்தது.
அதனையொட்டி, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., வம்சிதரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்து வதுடன், திருடர்கள் நடமாட்டத்தை கண் காணித்திட போலீசாரை அறிவுறுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement