வத்தலக்குண்டு அருகே பட்டாசு வெடித்ததை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது 16 வயது மகள், தனது வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரின் தாயார் தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது பட்டாசுகளை வெடித்து தீர்த்து விடாதீர்கள் என்று கூறி சத்தம் போட்டுள்ளார் இதனால் கோபம் அடைந்த அந்த சிறுமி வீட்டுக்குள் சென்று அறை கதவை தாழிட்டுக் கொண்டார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பெற்றோர் அங்கு வந்து பார்த்தபோது சிறுமி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பட்டிவீரன்பட்டி போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
நாளை தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் பட்டாசு வெடித்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM