புதுடெல்லி: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 2 நகரும் படிக்கட்டுகளை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கி உள்ளார். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி நகரும் படிக்கட்டு வசதியை செய்து தர வேண்டுமென ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் 1ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.