நடிகர் பாலா தனது இரண்டாவது மனைவியையும் பிரிந்து விட்டதாக தகவல் பரவி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் அன்பு, வீரம், காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளவர் பாலா.
இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
பாலாவுக்கு 2016-ம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. பின்னர் டாக்டரான எலிசபெத்தை கடந்தாண்டு மறுமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
இது குறித்து பாலா பேஸ்புக்கில் கூறுகையில், இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம்.
என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன்.
எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.