இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்! இங்கிலாந்தை ஆளப்போகும் வம்சாவளி இந்தியர்

புதுடெல்லி: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிஷிசுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார். இங்கிலாந்தின் பிரதமராகும் ரிஷி சுனக், ஒரு காலத்தில் இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தை ஆளப்போகும் முதல் வம்சாவளி இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்தின் பிரதமராகத் தயார் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார். தன்னை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவித்த அவர்ர், ‘பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும்’ என்று தனது விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக, வேட்பாளராக களம் இறங்குவதை அறிவித்த ரிஷி சுனக், இங்கிலாந்து சிறந்த நாடு “ஆனால் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்” என்றும், அதனால்தான் “கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் வேட்பாளராக நிற்கிறேன்” என்று சுனக் கூறியிருந்தார்.

தற்போது ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராவது முடிவாகிவிட்டது. இந்த செய்தியை ஏ.என்.ஐ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) பதவி விலகும் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸுக்குப் பிறகு பதவியேற்கிறார். தேசம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால், இங்கிலாந்தை வழிநடத்த அவர் தயாராகிவிட்டார்.  

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு 

மேலும் படிக்க | UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.