இங்கிலாந்து: கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனாக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறார். நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகியதால் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரானார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனாக் விரைவில் பிரதமராக பதவியேற்பார். இங்கிலாந்து நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் ரிஷி சுனாக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டது.