வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகம் முழுவதும் ‘வாட்ஸ் ஆப்’ சேவை முடங்கியதால், பயனர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் சரியானது.
உலகம் முழுவதும் சமூக வலைதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் ‘வாட்ஸ் ஆப்’ செயலியை பயன்படுத்துகின்றனர். 500 கோடி பேர் அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் சேவை திடீரென முடங்கியது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு எனக்கூறப்படுகிறது. இந்த செயலியை இணையத்துடன் இணைக்க முடியவில்லை. இதன் காரணமாக, குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்களை பகிர முடியாமல் பயனர்கள் அவுதிக்குள்ளாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு இந்த பிரச்னையை சந்தித்து உள்ளனர். இதனால், டுவிட்டரில் அவர்கள் கருத்து பகிர துவங்கவே, ‘whatsappdown’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
இது தொடர்பாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‛வாட்ஸ்ஆப்பில் சிலருக்கு தகவல் அனுப்புவது / பெறுவதில் சிரமம் உள்ளதை அறிந்துதோம். தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டு வாட்ஸ்ஆப் சேவை சீரானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement